ரேனிகுண்டாவில் சிம்பு பாட்டு

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (17:28 IST)
நடிப்பதுடன் நண்பர்களின் படங்களில் பாடுவது சிம்புவின் ஹாபி. என்னை தெ‌ரியுமா படத்தில் ஒரு பாடல் பாடியவர், பன்னீர்செல்வம் இயக்கும் ரேனிகுண்டாவிலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

ரேனிகுண்டாவில் தயா‌ரிப்பாளர் சக்ரவர்த்தியின் மகன் ஜானி நாயகனாக நடிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை. இந்தப் படத்துக்காக தலக்குளம் சந்தையில் தகராறு பண்ணு... என்ற பாடலை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார்.

மாஸ் சாங் வகையைச் சேர்ந்த இந்தப் பாடலை சிம்பு பாடினார். பாடல் நன்றாக வந்திருப்பதாகவும், கண்டி‌ப்பாக பாடல் ஹிட்டாகும் என்றும் தெ‌ரிவித்தார், இயக்குனர் பன்னீர்செல்வம்.

வெப்துனியாவைப் படிக்கவும்