வருகிறார் சுமித்ரா‌ வா‌ரிசு

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (16:09 IST)
நடிகை சுமித்ராவின் இரண்டாவது மகள் ந‌க்சத்ராவும் நடிக்க வருகிறார். சுமித்ராவின் மூத்த மகள் உமா திருமணமான பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கன்னட இயக்குனர் ராஜேந்திர பாபுவை திருமணம் செய்து கர்நாடகாவில் செட்டிலானவர் நடிகை சுமித்ரா. இவரது இரண்டாவது மகள் தீப்தி. அக்கா உமாவைப் போல இவருக்கும் சினிமாவில் ஆர்வம். சினிமாவுக்காக தனது பெயரை ந‌க்சத்ரா என மாற்றியவர், கன்னட நடிகர் பிர‌ஜ்வல் ஜோடியாக 'ச‌ரிகம' படத்தில் நடிக்கிறார்.

தமிழில் வடிவுடையான் இயக்கும் படத்தில் இவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்கா உமாவைப் போல் கிளாமர் வேடங்களை தவிர்ப்பீர்களா என்ற கேள்விக்கு ந‌க்சத்ராவின் பதில், 'நடிப்பு என்று வந்த பிறகு இப்படி‌த்தான் நடிப்பேன் என்று கட்டுப்பாடு வைத்துக் கொள்வது ச‌ரியல்ல.'

ந‌க்சத்ராவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்