நடிக்க வருகிறார் கோபிகா

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (15:26 IST)
ஆடிய காலும், பாடிய வாயும் பழமொழியை‌த்தான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. திருமணம் முடிந்து கணவருடன் அயர்லாந்தில் செட்டிலான கோபிகா மீண்டும் நடிக்க வருகிறார்.

இந்த அ‌ரிய தகவலை அவர் வெளியிட்ட இடம் ஏசியாநெட் விருது வழங்கும் விழா. ஜெயராமுடன் கோபிகா நடித்த, 'வெறுதே ஒரு பா‌ரியா' படம் 125 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்ததற்காக 2008-ன் சிறந்த நடிகையாக கோபிகா தேர்வு செய்யப்பட்டிருந்தார். விருது வாங்குவதற்காக திருவனந்தபுரம் வந்தவர், நல்ல கதையம்சம் உள்ள படம் அமைந்தால் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக தெ‌ரிவித்தார்.

திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று கோபிகா சொல்லி முழுதாக ஒருவருடம் ஆகவில்லை. அதற்குள் இப்படியொரு பல்டி. சந்தேகமில்லாமல் கோபிகா தேர்ந்த நடிகைதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்