தமிழ் திரையுலகில் நிலவும் தேக்க நிலைக்கு திரையரங்கு கட்டணம் உயர்ந்ததும் ஒரு காரணம். திரையரங்கு கட்டணத்தை 10, 20, 30 ரூபாயாக குறைப்பது தொடர்பாக விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. இதில், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து ஆலோசித்து, இந்த மூன்று சங்கங்களும் ஒப்புக் கொள்ளும் கட்டணத்தை வசூலிக்கத் தயார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திரையரங்கு கட்டணம் உயர்வுக்கு படத்தயாரிப்பு செலவு உயர்ந்ததே காரணம், தயாரிப்பு செலவை குறைத்து, சதவீத அடிப்படையில் படத்தை திரையிடும்போது கட்டணத்தை குறைப்பதில் சிரமம் இல்லை என தெரிவித்தார், சங்கத்தின் தலைவர் அண்ணாமலை.
தயாரிப்பு செலவை குறைக்க வேண்டுமானால் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும். ஆக, நடிகர் சங்கமும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய பிரச்சனை இது.