மணிரத்னம் இந்தி, தமிழ் இரு மொழிகளில் இயக்கிவரும் ராவணன் - தமிழ்ப் பெயர் இன்னும் முடிவாகவில்லை - ராமாயணத்தை தழுவி எடுக்கப்படுவது தெரிந்ததே.
இதே ராமாணயத்தை தழுவி எடுக்கப்பட்டு வரும் இன்னொரு படம், ஆரண்ய காண்டம். எஸ்.பி.பி. சரணின் கேப்பிடல் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா நடிக்கின்றனர். படத்தை இயக்குகிறவர் அறிமுக இயக்குனர், குமாரராஜன்.
அபிஷேக் பச்சன், விக்ரம் ராவணனில் நடிக்கும் அதே கதாபாத்திரத்தை ஜாக்கி ஷெராஃபும், ரவி கிருஷ்ணாவும் ஆரண்ய காண்டத்தில் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான ராமாயணக் கதைகள் உலா வருவதால், இந்த இரு படங்களின் ராமாயண பாதிப்பும் வேறு வேறாக இருக்கும் என்று நம்பலாம்.