மாஸ் இயக்குனர், கிளாஸ் நடிகர்

சனி, 31 ஜனவரி 2009 (14:08 IST)
கே.எஸ். ரவிக்குமார் என்றால் மாஸ். விக்ரம் என்றால் கிளாஸ். மாஸும் கிளாஸும் விரைவில் இணையப் போகிறது. ஆம், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சீயான்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகிவரும் ஜக்குபாய் ஏறக்குறைய முடிந்துவிட்டது. அடுத்து ூர்யா நடிக்கும் ஆதவன். கதை விவாதம் எப்போதோ முடிந்துவிட்டது. ஜக்குபாயின் போஸ்ட் புரொட‌க்சன் வேலைகள் முடிந்தால் படத்தை தொடங்கிவிட வேண்டியதுதான்.

ஆதவனுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கே.எஸ். ரவிக்குமார். ஹீரோ விக்ரம், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. ஹீரோயின், தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்