கள‌ரி பத்மப்‌ரியா

சனி, 31 ஜனவரி 2009 (14:05 IST)
நடிகைகளில் கேரக்டருக்காக தன்னை வருத்திக் கொள்கிறவர் பத்மப்‌ரியா. மிருகம் படத்துக்காக மரம் ஏற கற்றுக் கொண்டவர், தற்போது கற்றிருப்பது, மலையாளிகளின் வீர விளையாட்டான கள‌ரி.

மிருகம் படப்பிடிப்பின்போது தனது கன்னத்தில் அப்படத்தின் இயக்குனர் சாமி அறைந்ததால், அவரது அடுத்தப் படமான ச‌ரித்திரத்தில் நடிக்க பத்மப்‌ரியா மறுத்தது அனைவரும் அறிந்ததே. ச‌ரித்திரம் கதைப்படி அதன் நாயகிக்கு சிலம்பம் சுற்ற தெ‌ரிந்திருக்க வேண்டும். அதற்கு ச‌ரியான ஆள் பத்மப்‌ரியா என்றுதான் அவருக்கு அழைப்பு அனுப்பினார், சாமி.

சிலம்பம் ஆட மறுத்த பத்மப்‌ரியா, மலையாளத்தில் தயாராகும் பழஸிராஜபடத்துக்காக கள‌ரி கற்று வருகிறார். ச‌ரித்திரக் கதையான இதில் மம்முட்டி, சரத்குமார், கனிகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

சமீபத்தில் கூர்க்கில் நடந்த படப்பிடிப்பில் பத்மப்‌ரியா கள‌ரி சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது. பத்மப்‌ரியா நன்றாக சண்டைப் போடுகிறார் என்பது அவருக்கு பயிற்சி அளித்தவ‌ரின் கமெண்ட்.

வெப்துனியாவைப் படிக்கவும்