யு டிவி தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது முகமூடி. மிஷ்கினின் முதல் சூப்பர் ஹீரோ படம்.
நந்தலாலாவை முடித்துவிட்டு, முகமூடியை தொடங்குவதாகத்தான் திட்டம். ஆனால், சூர்யாவுக்கு சிங்கம், ஆதவன் என மேலும் பல புராஜெக்ட்கள். ஆறஅமர எடுக்க வேண்டிய படம் என்பதால் முதலில் சிங்கம், ஆதவனை முடித்துவிட்டு முகமூடியை தொடங்குகிறார்கள்.
சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் படத்தில் கணிசமான காட்சிகள் கிராபிக்ஸில் உருவாகிறது. ஹாலிவுட்டின் விஷுவல் எபெஃக்ட் சூப்பர்வைசர் பிரெயின் ஜென்னிங்ஸ் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் தசாவதாரத்தில் சுனாமி காட்சியை உருவாக்கியவர்.
இவருடன் மேலும் பல ஹாலிவுட் கலைஞர்கள் முகமூடியில் பணிபுரிய இருக்கிறார்கள்.