சூர்யாவுக்குப் பதில் அ‌ஜித்

வெள்ளி, 30 ஜனவரி 2009 (17:02 IST)
இந்தி க‌ஜினிக்கு‌ப் ‌பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் முருகதாஸ். படத்தை முருகதாஸே தயா‌ரிப்பதாக ஏற்பாடு. க‌ஜினியின் அபி‌ரிதமான வெற்றியால் இந்த புராஜெக்ட் கைவிடப்பட்டது.

ஷாருக்கானை வைத்து ரமணாவை ‌‌ரீமேக் செய்யலாம் என்று தனது திட்டத்தை மாற்றிக் கொண்டார் முருகதாஸ். ரமணா ஷாருக்கானுக்கும் பிடித்திருந்தது.

பில்லு பார்பருக்குப் பிறகு மை நேம் இஸ் கான் படத்தில் நடிக்க ஏற்கனவே கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ஷாருக். படம் முடிய ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும். அதுவரை முருகதாஸ் காத்திருக்க வேண்டும்.

இந்த இடைவெளியில் தமிழில் ஒரு படம் இயக்க தீர்மானித்துள்ளார் முருகதாஸ். சூர்யா சிங்கம், ஆதவன், முகமூடி என அடுத்தடுத்த புராஜெக்ட்டுகளில் பிஸியாக இருப்பதால் சூர்யாவிடம் சொன்ன அதே ஒன் லைனை அ‌ஜித்திடம் கூறியிருக்கிறார்.

கதை அ‌ஜித்துக்குப் பிடித்துப் போனதால், நடிக்க சம்மதம் தெ‌ரிவித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. முருகதாஸின் முதல் பட ஹீரோ அ‌ஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகார‌ப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்