கதாநாயகி மீனா

வெள்ளி, 30 ஜனவரி 2009 (16:51 IST)
பத்து வருஷ பழக்கமுள்ள செய்தியை தலைப்பாக்குறீங்களே என்று அவசரப்பட்டு திட்டாதீர்கள். தமிழில் காணாமல்போன மீனா கதாநாயகியாக நடிக்கிறார்.

மலையாளத்தில் இப்போதும் மீனாவுக்கு மவுசு குறையவில்லை. சீனியர் நடிகர்களின் நாயகி பட்டியலில் இன்னும் மீனாவின் பெயர் மங்காமல் மங்களகரமாக துலங்கிக் கொண்டிருக்கிறது.

சீனிவாசன் நடிக்கும் புதிய படம், சம்விதானம் குஞ்சாக்கோ (இயக்கம் குஞ்சாக்கோ என்று அர்த்தம்). இதில் சீனிவாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனா. இவர்கள் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். ஜோடியாக நடித்த லேட்டஸ்ட் படம், கத பறயும்போள்.

விரைவில் இந்தப் படத்தின் ‌‌ரீமேக்கையும் தமிழில் எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்