மீண்டும் இளவேனில்

வெள்ளி, 30 ஜனவரி 2009 (16:24 IST)
உளியின் ஓசை படத்தை இயக்கிய இளவேனில் மீண்டும் படம் இயக்குகிறார். முதலில் ச‌ரித்திரப் படம், இப்போது சமூகப் படம்.

களம் வேறு என்றாலும் காசு போடுகிறவர் ஒருவர்தான். உளியின் ஓசை படத்தை தயா‌ரித்த ஆறுமுகனே‌‌ரி எஸ்.பி. முருகேசனே சமூகப் படத்தையும் தயா‌ரிக்கிறார். கதை? அதில்தான் குழப்பம்.

முதல்வர் எழுதிய சாரப்பள்ளம் சாமுண்டி கதையை அடிப்படையாக வைத்து உளியின் ஓசை தயாரானது. இந்தமுறையும் முதல்வ‌ரின் சிறுகதையொன்றை இளவேனில் படமாக்குகிறார் என்பது காற்றில் கசிந்துவரும் தகவல்.

தாய் காவியம், பொன்னர் சங்கர் என முதல்வ‌ரின் இரு கதைகள் படமாகாமல் பாதியில் நிற்பதால் இனி யாருக்கும் கதை கொடுப்பதில்லை என்ற முடிவில் முதல்வர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த‌ச் சூழலில் இளவேனிலுக்கு கதை கிடைக்குமா?

தனது கதைகளை சிறந்த முறையில் திரைப்படமாக்கியது இளவேனில்தான் என்று உளியின் ஓசை வெளிவந்தபோது பாராட்டினார் முதல்வர். மேலும், இளவேனில் முதல்வ‌ரின் உற்ற தோழர். கதை கண்டிப்பாக கிடைக்கும் என புளி கரைக்கிறார்கள்.

மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடாது போலிருக்கிறதே.

வெப்துனியாவைப் படிக்கவும்