சென்சா‌ரில் 1977

வெள்ளி, 30 ஜனவரி 2009 (16:08 IST)
சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் 1977 அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. படத்தின் ட்ரெய்லரே மிரட்டுகிறது. ஜேம்ஸ்பாண்ட் படப்பாணியில் 1977-ஐ எடுத்திருப்பதாகக் கூறினார் இயக்குனர், தினேஷ்குமார்.

சரத்குமா‌ரின் விதவிதமான கெட்டப்புகளுக்கு ஏற்றபடி ஒளிப்பதிவு செய்துள்ளது படத்தின் ஹைலைட். மிகுந்த பொருட்செலவில் தயாராகியிருக்கிறது படம்.

சொந்தமாக படம் தயா‌ரிக்க மாட்டேன் என்ற முடிவில் இருந்த சரத், படத்தின் கதையை கேட்டு தானே படத்தை தயா‌ரித்தது படத்தின் முதல் வெற்றி என பூ‌ரிக்கிறார் தினேஷ்குமார். படத்துக்கு இசையமைத்த வித்யாசாக‌ரின் பாராட்டு இரண்டாவது வெற்றி.

இன்று (30-01-09) படத்தை தணிக்கைக்குழு பார்க்கிறது. ஆபாசம் இல்லையென்றாலும், அதிபயங்கர சண்டைக் காட்சிகள் இருப்பதால் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்