பிப்.1 முதல் ம‌ரியாதை படப்பிடிப்பு

வெள்ளி, 30 ஜனவரி 2009 (15:53 IST)
திருமங்கலம் இடைத்தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட ம‌ரியாதை படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது.

வானத்தைப்போல படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜயகாந்த், விக்ரமன் இணையும் படம் என்பதால் முந்தைய வெற்றியை இந்தப் படமும் நிச்சயம் கையகப்படுத்தும் என்பது விநியோகஸ்தர்களின் நம்பிக்கை.

அந்த நம்பிக்கைக்கு ஏற்ப அரசியல் துளியும் இன்றி படத்தை எடுத்து வருகிறார் விக்ரமன். இந்த வெ‌ஜிடே‌ரியன் ட்‌‌ரீட்மெண்டுக்கு விஜயகாந்தும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். பன்ச் டயலாக், பறந்து பறந்து அடிப்பது உள்பட தனது படத்தின் ட்ரேட் மார்க் முத்திரை எதையும் ம‌ரியாதையில் அவர் வலியுறுத்துவது இல்லை.

திருமங்கலம் இடைத்தேர்தலால் தடைபட்ட படப்பிடிப்பு வரும் பாரளுமன்ற தேர்தலால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முழுவீச்சில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதென தீர்மானித்துள்ளார் விஜயகாந்‌த். அடுத்த மாதம் ஒன்றாம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கும் படப்பிடிப்பு பூசணிக்காய் உடைக்கும் வரை நான்ஸ்டாப்பாக தொடர இருக்கிறதாம்.

ம‌ரியாதையிலாவது விஜயகாந்துக்கு ஜெயம் கிடைக்கட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்