சரத்குமார் நடித்தப் படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாராகியிருக்கும் படம், 1977. படமே தயாரிக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த சரத்தின் மனதை மாற்றிய படம் என்பது, 1977 ன் கூடுதல் அட்ராக்சன்.
படத்தின் பெரும்பகுதி மலேசியாவில் எடுக்கப்பட்டிருக்கிறது. 1977ல் மலேசியா வரும் சரத்குமார் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். அவருக்கு ஏற்படும் இழுக்கை மகன் சரி செய்வதே படத்தின் கதை. சரத்துக்கு அப்பா, மகன் என்று இரண்டு வேடங்கள்.
நமிதா, பர்ஸானா இருவரும் ஹீரோயின்கள். நமிதா முதன் முறையாக வழக்குரைஞராக நடித்துள்ளார். படத்தைப் பற்றி கூறும்போது, இது சென்னையில் நடந்த உண்மை சம்பத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் இயக்குனர் ஜி.என். தினேஷ்குமார்.
1977-ல் சரத்குமார் மொத்தம் ஆறு மாறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். ஆறும் கேரக்டர்கள் இல்லை, மாறுவேடங்கள். படத்தின் டெம்போவை இந்த மாறுபட்ட தோற்றங்கள் அதிகரிக்குமாம்.