சிவாஜி படத்தின் சென்னை உரிமையை பல கோடிக்கு வாங்கி, அதில் லாபமும் பார்த்தவர் அபிராமி ராமநாதன். அவர் தொட்டால் அது பொன்னாகும் என்பது அனுபவ உண்மை.
சிவாஜிக்குப் பிறகு அதேபோல் அதிக விலை கொடுத்து இவர் வாங்கியிருக்கும் படம் கந்தசாமி. சுசி. கணேசன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் மெகா பட்ஜெட் படம்.
இதன் சென்னை உரிமையை நான்கு கோடிக்கு வாங்கியிருக்கிறார் அபிராமி ராமநாதன். விக்ரம் நடித்தப் படங்களிலேயே அதிக விலைக்கு விற்பனையாகியிருக்கும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கந்தசாமியின் கேரள உரிமை இதேபோல் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. கேரள விற்பனை உரிமை ஏறக்குறைய இரண்டு கோடிகள்.
இந்த அதிக விலையை வசூலிக்கும் அனைத்து விஷயங்களும் படத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் அபிராமி ராமநாதன். படம் மார்ச் அல்லது ஏப்ரலில் வெளிவருகிறது.