கலாச்சாரத்தை சோதிக்கும் பக்தன்

செவ்வாய், 27 ஜனவரி 2009 (16:11 IST)
படத்தின் பெயர் பக்தன். காயத்‌ி மந்திரம், காமாட்சி அம்மன் ூழ வலம்வரும் பக்தி படமா? இல்லை.

கலாச்சாரத்தை சூடு பறக்க உரசிப் பார்க்கும் குடும்பக் காவியம். படத்தின் ஹீரோ இளம் பெண் ஒருத்தியை கண்மூடித்தனமாக காதலிக்கிறான். அவள் இல்லாமல் இவன் இல்லை. காதல் முற்றிய பிறகு அந்த உண்மை தெ‌ரிய வருகிறது. அந்த இளம் பெண் ஏற்கனவே திருமணம் ஆனவள். அவன் யா‌ரிடம் வேலை பார்க்கிறானோ அவரது மனைவி.

கண் இல்லாத காதலுக்கு கலாச்சாரம் மட்டும் இருக்குமா? தனது காதலை மீண்டும் தொடர்கிறான். முடிவு என்ன என்பதை சொல்கிறது, பக்தன்.

மல்லிகை ராஜன் இயக்கும் இந்தப் படத்தில் மணிவண்ணன், சஞ்சய், மதிஷஆகியோர் நடிக்கின்றனர். எத்தனைப் பற்றிய படத்துக்கு பக்தன் என்று பெயர் வைத்திருப்பதுதான் குழப்புகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்