இந்திக்கு செல்லும் கவிதாலயா

சனி, 24 ஜனவரி 2009 (15:56 IST)
கிருஷ்ணலீலை, நூத்துக்குநூறு படங்களை தயா‌ரித்து வரும் கவிதாலயா தனது கவனத்தை இந்திப் படங்களின் மீது திருப்பியிருக்கிறது.

தமிழில் கவிதாலயா தயா‌ரித்த படங்கள் வெகுவிரைவில் இந்தியில் ‌‌ரீமேக் செய்யப்பட உள்ளன. கமல், ர‌ஜினி நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தை இந்தியில் தயா‌ரிக்கும் வேலை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. நாளை, சக்கரவியூகம் படங்களை இயக்கியவர் இந்தி நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்குகிறார்.

நெற்றிக்கண் படத்தையும் இந்தியில் தயா‌ரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமிதாப், அ‌க்சய் இதில் நடிக்கக்கூடும். படத்தை ஒளிப்பதிவாளர் ரவியாதவ் இயக்குகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்