நாளை எஸ்எம்எஸ் ஆடியோ

சனி, 24 ஜனவரி 2009 (15:56 IST)
சிவா மனசுல சக்தி. சுருக்கமாக எஸ்எம்எஸ். விகடன் டாக்கீஸின் முதல் தயா‌ரிப்பான இப்படத்தின் ஆடியோ நாளை வெளியிடப்படுகிறது.

எம். ராஜேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ‌‌ஜீவா, அனுயா நடித்துள்ளனர். காதலர்களின் ஈகோ மோதல்தான் கதை. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜஇசையமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர், நா. முத்துக்குமார்.

இப்படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்படுகிறது. சென்னை சத்யம் வளாகத்தில் இந்த வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்