ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது இந்தியாவுக்கே பெருமையான விஷயம் என்று ஏ.ஆரை மனம் திறந்து பாராட்டினார், யுவன் ஷங்கர் ராஜா.
முதன் முறையாக யுவன் மேடை நிகழ்ச்சி ஒன்றை கனடாவின் டொரண்டோ நகரில் ஏப்ரல் 25 ஆம் நாள் நடத்துகிறார். பிளாட்டினம் என்ற நிறுவனம் இந்த இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறது.
50 இசைக் கலைஞர்களுடன் பாடகர்கள் ஹரிகரன், சங்கர் மகாதேவன், விஜய் யேசுதாஸ், பாடகிகள் சுவேதா, வசுந்தராதாஸ் ஆகியோரும் இதில் பங்கேற்கிறார்கள். நடிகர் நடிகைகளின் நடனங்களும் இந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.
நிகழ்ச்சியின் முக்கியமான அட்ராக்சன், இளையராஜா. பொதுவாக மேடை கச்சேரிகளை தவிர்க்கும் இசைஞானி, யுவனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடுகிறார்.
இந்த மேடை நிகழ்ச்சி குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த யுவன், கோல்டன் குளோப் விருது கிடைத்ததற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.