அடுத்தவரை கிண்டல் செய்கிறாரா, இல்லை தன்னைத்தானே பகடி செய்கிறாரா? மன்சூர் அலிகான் எடுக்கும் படங்களைப் பார்க்கும் ஒருவருக்கு இந்த சந்தேகம் எழுவது இயற்கை.
என்னைப்பார் யோகம் வரும் படத்துக்குப் பிறகு இவர் அறிவித்திருக்கும் புதிய படத்தின் பெயரும் இந்த சந்தேகத்தையே எழுப்புகிறது.
ரா. மணிவாசகம் இயக்கத்தில் மன்சூர் நாயகனாக நடிக்கும் படம் கையில காசு வாயில தோசை. கதை, திரைக்கதை, பாடல்கள், இசை அனைத்தும் மன்சூரே.
வழக்கம்போல் நக்கல், நையாண்டியுடன் அரசியல் பிரச்சனைகளையும் இதில் கூடுதலாக சேர்த்துக் கொண்டுள்ளார். தற்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏப்ரலில் படம் திரைக்கு வருகிறது.
படத்தை ஈழம் சினிமாஸ் சார்பில் ஹமீதா அலி தயாரிக்கிறார்.