லட்சுமி மூவி மேக்கர்ஸில் சாந்தனு

செவ்வாய், 20 ஜனவரி 2009 (15:46 IST)
பாக்யரா‌ஜ் இயக்கத்தில் புதிய வார்ப்புகள் படத்தில் நடித்துவரும் அவரது மகன் சாந்தனு அடுத்து லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயா‌ரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

தொடர்ச்சியாக படங்கள் தயா‌ரித்து வந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் சிறிது காலம் படத் தயா‌ரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தது. மீண்டும் படத் தயா‌ரிப்பில் இறங்கியவர்கள் முதலில் சிம்பு நடித்த சிலம்பாட்டத்தை தயா‌ரித்தனர். ஷக்தி நடிக்கும் ஆட்ட நாயகன் படம் தற்போது தயா‌ரிப்பில் உள்ளது.

சாந்தனு நடிக்கும் புதிய படத்தை தயா‌ரிக்கவும் லட்சுமி மூ‌வி மேக்கர்ஸ் திட்டமிட்டுள்ளது. இயக்குனர் உதயன் சாந்தனு நடிக்கும் படத்தை இயக்குவார் என தெ‌ரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்