ரஹ்மானுக்கு பாராட்டு விழா?

செவ்வாய், 20 ஜனவரி 2009 (15:41 IST)
கோல்டன் குளோப் விருது கிடைத்ததற்கு நாலா திசைகளிலிருந்தும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரும் பாராட்டு தெ‌ரிவித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதி இசை ரசிகர். ரஹ்மானுக்கு விருது கிடைத்ததற்கு தனிப்பட்ட முறையில் பாராட்டு தெ‌ரிவித்ததோடு, அரசு சார்பில் ரஹ்மானுக்கு விழா எடுக்கவும் அவர் விரும்புவதாக தெ‌ரிவிக்கின்றனர்.

பல்வேறு தரப்பினர் ரஹ்மானுக்கு பாராட்டு தெ‌ரிவித்தாலும், அரசு சார்பில் விழா எடுப்பதுதானே அவரது ச‌ரித்திர சாதனைக்கு பெருமை?

விரைவில் இந்த கேள்விக்குறி ஆச்ச‌ரியக்குறியாகும் என்று மனப்பூர்வமாக நம்புவோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்