பருத்திவீரனுக்கு அடுத்து அமீர் இயக்குவதாக இருந்த படம், கண்ணபிரான். ஹீரோவாக ஜெயம் ரவியையும் தேர்வு செய்திருந்தார். இடையில் யோகி வர கண்ணபிரான் தள்ளிப்போனது.
அமீர் நடித்துவரும் யோகி அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுப்ரமணிய சிவா படத்தை இயக்கி வருகிறார். மேக்கப் போட்ட இயக்குனர்கள் அவ்வளவு எளிதில் அரிதாரத்தை கலைப்பதில்லை என்பது வரலாறு. அமீர் என்ற திறமையான இயக்குனரும் இந்த வரலாற்றில் இடம்பெற்று விடுவாரோ என்பது நல்ல சினிமாவை விரும்புகிறவர்களின் கவலை.
நல்லவேளையாக வரலாற்றில் இடம்பெறும் எண்ணமெல்லாம் அமீருக்கு இல்லை. யோகி முடிந்த பிறகு தனது முந்தைய திட்டப்படி கண்ணபிரானை தொடங்குகிறார். ஹீரோ ஜெயம் ரவி.
யோகியில் நடித்ததால் கண்ணபிரானிலும் அமீர் நடிப்பாரா? சான்ஸே இல்லை. கண்ணபிரானில் அமீர் இயக்குனர் மட்டும்தான்.