டாப்லெஸ் காட்சிகள் நிறைந்த வேலு பிரபாகரனின் காதல் அரங்கம் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
பெண்களின் மார்பகம் என்பது வெறும் பாலூட்டும் ஒரு உறுப்புதான், அதனை காம உணர்வுடன் பார்ப்பது தவறு என்ற கருத்தியலை முன் வைத்து மேலாடை எதுவும் இன்றி வேலு பிரபாகரன் எடுத்த படம், காதல் அரங்கம்.
தணிக்கைக் குழு இவரின் கருத்தியலை ஏற்காததுடன் டாப்லெஸ் காட்சிகளுக்கு அனுமதியும் மறுத்தது. மறு தணிக்கைக் குழுவிலும் சாதகமான பதில் கிடைக்காததால், டாப்லெஸ் காட்சிகளை நீக்கி, காதல் கதை என்ற பெயரில் படத்தை வெளியிடுகிறார் வேலு பிரபாகரன்.
படத்தில் வரும் சில காட்சிகளை தமிழகத்தில் எடுத்தால் வீணாக பிரச்சனைவரும் என ஆந்திராவிலுள்ள மலைப்பகுதியில் எடுத்திருக்கிறார்கள். இந்தக் காட்சிகளில் நாயகனும், நாயகியும் மரவுரி அணிந்து நடித்துள்ளனர்.
அடுத்த மாதம் படத்தை வெளியிட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.