நாளை முதல் நந்தலாலா இசை

செவ்வாய், 13 ஜனவரி 2009 (17:44 IST)
நான் கடவுள் படம் மூலம் தான் ஒரு மேஸ்ட்ரோ என்பதை தமிழ்கூறும் நல்லுலகுக்கு மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார், இசைஞானி. பாலா, மிஷ்கின் போன்ற இளம் இயக்குனர்கள் இளையராஜாவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது நிச்சயமாக ஆரோக்கியமான விஷயம்.

நான் கடவுளை‌த் தொடர்ந்து நாளை நந்தலாலா படத்தின் பாடல்களும் இசைஞானியின் ரசிகர்களை மகிழ்விக்க வெளியாகிறது. தனது முதல் இரு படங்களுக்கு சுந்தர் சி. பாபுவை பயன்படுத்திய மிஷ்கின் நந்தலாலாவுக்கு இளையராஜாவைவிட்டால் வேறு யாரும் இசையமைக்க முடியாது என்று சொல்லியே அவரை ஒப்பந்தம் செய்தார்.

உணர்வு‌ப்பூர்வமான கதை என்பதைத் தாண்டி, படத்தின் பெரும்பகுதி வசனமே இல்லாமல் இசையால் நிரப்பப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம்.

மிஷ்கினின் படத்தைப் போல நந்தலாலா பாடல்களும் இளையராஜாவின் இசையில் வித்தியாசமாக இருக்கும் என்று தாராளமாக நம்பலாம். ந‌ரிக்குறவ பெண் பாடியிருக்கும் பாடல் நந்தலாலாவின் ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்