அ‌ஜித் படத்தில் பிரபு

செவ்வாய், 13 ஜனவரி 2009 (17:43 IST)
குணச்சித்திர வேடமா? கண்ணை மூடிக்கொண்டு பிரபுவை ஒப்பந்தம் செய்கிறார்கள். ஹீரோவாக‌த்தான் நடிப்பேன் என்று சூழல் தெ‌ரியாமல் இவர் பிடில் வாசிப்பதில்லை என்பதால் கை நிறைய படங்கள், இளைய திலகத்துக்கு.

பில்லாவில் அ‌ஜித்துடன் நடித்தவர் அ‌ஜித்தின் அடுத்தப் படமான அசலிலும் நடிக்கிறார். சரண் இயக்கும் இந்தப் படத்தை பிரபு - ராம்குமா‌ரின் சிவா‌ஜி பிலிம்ஸ் தயா‌ரிப்பது குறிப்பிடத்தக்கது.

ா‌ரிஸ் ஜெயரா‌‌ஜ் படத்துக்கு இசையமைக்கிறார். வாரணம் ஆயிரத்தில் நடித்த சமீரா ரெட்டி நாயகி. பிப்ரவ‌ரியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்