வெளிநாடுகளில் அர்ஜுன் படம்

திங்கள், 12 ஜனவரி 2009 (15:43 IST)
பாடல் காட்சிகளுக்கு மட்டும் வெளிநாடு சென்று‌க் கொண்டிருந்த அர்ஜுன், படத்தின் டாக்கி போர்ஷனை எடுப்பதற்காக வெளிநாடு செல்லவிருக்கிறார்.

அரண் படத்தை இயக்கிய மேஜர் ரவி அடுத்து ஐடிஏ பிலிம்ஸுக்காக தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார். அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு அதே கண்கள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பழம்பெரும் நடிகர் அசோகன் நடித்த அதே கண்களுக்கும் இதற்கும் கதை ‌‌ரீதியாக எந்த சம்பந்தமும் இல்லை.

பாலிவுட் நடிகை பஞ்சனா சிங் அர்ஜுன் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சீனா, மலேசியா, பாங்காக் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடக்கிறது. க்ரைம் த்‌ரில்லரான இப்படம் விரைவில் தொடங்கயிருக்கிறது.

இந்தத் தகவல்களை மேஜர் ரவி தெ‌ரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்