அதிரடி அனுஷ்கா

திங்கள், 12 ஜனவரி 2009 (15:29 IST)
சினிமாவில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் சிலருக்கு திடீரென நடசத்திர அந்தஸ்து உச்சத்துக்கு செல்லும். கல்லூரியில் நடிக்கும் வரை தமன்னாவை கண்டுகொள்ள யாருமில்லை. அவர் நடித்ததெல்லாம் துக்கடா படங்கள்.

இன்று நிலைமை தலைகீழ். தமன்னாவின் கால்ஷீட்டுக்கு அறுபது லகரம் கொடுக்க தயா‌ரிப்பாளர்கள் தயார். தனுஷுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், பரத்துடன் ஜப் வி மெட் ‌‌ரீமேக் என தமன்னா பிஸி.

தமன்னாவைப் போல் அதிர்ஷ்ட தேவதையின் பார்வையில் விழுந்த இன்னொருவர், அனுஷ்கா. ரெண்டு படத்தில் மாதவன் ஜோடியாக இவர் நடித்தபோது இவரை சீண்ட ஆளில்லை. தெலுங்கில் தற்போது இவரது கொடிதான் உயரப் பறக்கிறது. பில்லா தெலுங்கு ‌‌ரீமேக்கில் நயன்தாராவைப் போல் டூ பீஸில் நடிப்பதற்கு அம்மணி பெற்றிருக்கும் சம்பளம் ஒரு கோடி.

தமிழில் இவரது ‌‌ரஎ‌ண்ட்ரி மிரட்டுகிறது. விஜயின் வேட்டைக்கரான் படத்தில் இவர்தான் ஹீரோயின். ஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரிப்பில் உருவாகும் சிறுத்தை படத்தில் கார்த்தி ஜோடியாகவும் அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஹ‌ி இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கும் சிங்கம் படத்திலும் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கலாம் என்கின்றன ஸ்டுடியோ வட்டார தகவல்கள்.

கூரையை‌ப் பிய்த்துக் கொண்டு கொட்டுவது இதுதானோ?

வெப்துனியாவைப் படிக்கவும்