தமிழ் சினிமா நடிகைகளில் முக்கால்வாசி பேருக்கு மலையாள முகம். கால்வாசி பேருக்கு இந்தி முகம். தமிழ்? சினேகா, சந்தியா என்று விரல் விட்டுதான் எண்ண வேண்டும்.
இந்தக் குறைவான எண்ணிக்கையில் நிறைவாக தெரியும் மற்றொரு நடிகை, தூத்துக்குடி கார்த்திகா. ராமன் தேடிய சீதையில் அற்புதமாக நடித்த இவரது புதிய படங்கள் எதுவும் வெளியாகாதது கவலையளிக்கும் விஷயம்.
அலையோடு விளையாடு, 365 காதல் கடிதங்கள், வைதேகி என மூன்று படங்கள் இவரது நடிப்பில் முடிவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இந்த மூன்றிலும் பாவாடை தாவணிதான் இவரது காஸ்ட்யூம். இப்படியே போனால் பாவாடை தாவணிக்கு மட்டும் ஒதுக்கி விடுவார்களோ என்ற நியாயமான பயத்தில் புதிய முடிவொன்றை எடுத்துள்ளார் கார்த்திகா.
மாடர்னான கிளாமர் வேடங்களிலும் நடிப்பது என்பதுதான் அந்த முடிவு. மும்பை மற்றும் மலையாள நடிகைகளுடன் போட்டிபோட இதுதான் சரியான முடிவு.