ராஜேஷ் எம். இயக்கத்தில் விகடன் டாக்கீஸ் தயாரித்திருக்கும் படம், சிவா மனசுல சக்தி. ஜீவா கதாநாயகனாகவும், புதுமுகம் அனுயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
ஜீவாவுக்கும், அனுயாவுக்கும் நடுவில் எற்படும் ஈகோ மோதல்தான் படத்தின் கதை. இருவரும் காதலிக்க ஆரம்பித்த பிறகும் இந்த ஈகோ மோதல் தொடர்கதையாகிறது.
அனுயா, ஜீவாவிடம் காதலைச் சொல்லும் காட்சியை சென்னையில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் எடுத்துள்ளார், இயக்குனர் ராஜேஷ். காதலி, காதலனிடம் டாஸ்மாக் பாரில் காதலைச் சொல்வது இதுதான் தமிழ் சினிமாவில் முதல் முறை என்கிறார் இவர்.
காவிய காதல் மாதிரி டாஸ்மாக் காதல். தள்ளாடாமல் இருக்குமா?