ரஜினி, கமல் என்று பெரிய நடிகர்களுடன் எண்பதுகளில் நடித்த அம்பிகா திருமணத்திற்குப் பின் அமெரிக்கா சென்றதுடன் நடிப்பதையும் நிறுத்தினார்.
சில வருடங்களுக்கு முன் அவர் மீண்டும் நடிக்க வந்தபோது அம்மா, அண்ணி வேடங்கள் கிடைப்பதே பெரும்பாடாகியது. அதனால் நடிப்பதை நிறுத்தி அமெரிக்காவில் இருக்கும் தனது மகனை ஹீரோவாக்க முயற்சி செய்து வருகிறார்.
அம்பிகாவின் சகோதரி ராதாவின் மகள் கார்த்திகா தெலுங்கில் நாக சைதன்யா ஜோடியாக நடிப்பது அம்பிகாவின் திடீர் முயற்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.