தனக்கு திருப்புமுனையாக அமைந்த மலையூர் மம்பட்டியானை, மம்பட்டியான் என்ற பெயரில் தனது மகன் பிரசாந்த் நடிப்பில் ரீமேக் செய்து வருகிறார் தியாகராஜன்.
பிரசாந்துக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். மூமைத்கானும் படத்தில் உண்டு. மலையூர் மம்பட்டியானில் இடம்பெற்ற காட்டுவழி போற பெண்ணே கவலைப்படாதே பாடலை ரீமேக்கில் பயன்படுத்த உள்ளனர்.
எந்தெந்த இடத்தில் எந்தெந்த மாதிரியான பாடல்களை பயன்படுத்துவது என்று தீர்மானித்த பிறகும் இதுவரை இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யாமல் இருக்கிறார் தியாகராஜன். மொத்த படமும் முடிந்த பிறகு பாடல்களை கம்போஸ் செய்யலாம் என காத்திருக்கினறனர்.