ஷகிலாவி‌ன் காமெடி

வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:55 IST)
மலையாள படவுலகிலிருந்து துரத்தப்பட்டு தமிழ் சினிமாவில் கரை ஒதுங்கிய ஷகிலாவை கோடம்பாக்கம் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. அதனால் தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பியவர் மீண்டும் தமிழுக்கு வருகிறார். பட‌ம் காதலை மறந்தேன்.

குத்து பாடல்களுக்கு ஆடிவரும் ல‌க்சதனது கதாநாயகி கனவை நிறைவேற்ற சொந்தமாக தயா‌ரித்துவரும் படம் காதலை மறந்தேன். மகள் ல‌க்சாவுக்காக சொந்த வீட்டை விற்று இந்தப் படத்தை தயா‌ரித்து வருகிறார் முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதா.

படத்தின் ஹைலைட் சமாச்சாரங்களில் ஒன்று ஷகிலாவின் காமெடி. படம் நெடுக காமெடி செய்துள்ளாராம் இந்த முன்னாள் செக்ஸ் பாம். காதலை மறந்தேன் வெளிவந்தால் தமிழில் ஒரு ரவுண்ட் வருவேன் என நம்பிக்கையுடன் கூறிவருகிறார், ஷகிலா.

வெப்துனியாவைப் படிக்கவும்