பொருத்தமாகத்தான் பெயரை தேர்வு செய்திருக்கிறார்கள். சற்றுமுன் கிடைத்த தகவல் என்று தினம் பத்து செய்திகளை சற்றுமுன் கிடைத்த தகவல் படத்தைப் பற்றி அப்டேட் செய்யலாம். அந்தளவுக்கு தினம் பல மாற்றங்கள்.
தக்காளி சீனிவாசன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் சற்றுமுன் கிடைத்த தகவல். ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஹீரோ. அம்முவாகிய நான் பாரதி ஹீரோயின். க்ரைம் த்ரில்லரான இதில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் கௌசல்யா.
முக்கால்வாசி படம் முடிந்த பிறகு தக்காளி சினிவாசன் எடுத்த காட்சிகள் சரியில்லை என்று அவரை கழற்றிவிட்டு, புவனை கண்ணனை புதிய இயக்குனராக நியமித்தனர். படப்பிடிப்பும் தடையில்லாமல் நடந்தது.
இந்நிலையில் படத்திலிருந்து கௌசல்யாவை திடீரென்று மாற்றியுள்ளனர். அவருக்குப் பதிலாக தற்போது நடித்து வருகிறவர் குஷ்பு.
படம் வெளிவருவதற்கு சற்றுமுன் வரை மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.