ப்‌ரியா வி. இயக்கத்தில் பிருத்விரா‌ஜ்

வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:51 IST)
கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா படங்களை இயக்கிய ப்‌ரியா வி. அடுத்து இயக்கும் படத்தில் பிருத்விரா‌ஜ் ஹீரோவாக நடிக்கிறார்.

அத்தி பூத்தார்போல எப்போதாவது பெண் இயக்குனர்கள் படம் பண்ணும் சூழலில், தொடர்ந்து படம் இயக்கும் ஒரேயொருவர், ப்‌ரியா வி. இவர் இயக்கிய இரு படங்களும் முதலுக்கு மோசம் செய்யாதவை.

அடுத்து இவர் இயக்க இருக்கும் படமும் முந்தைய இரு படங்கள் போலவே மனித உறவுகளை பற்றியதுதானாம். இதில் ஹீரோவாக நடிக்கிறார், பிருத்விரா‌ஜ். இவர் ப்‌ரியாவின் இரண்டாவது படமான கண்ணாமூச்சி ஏனடா படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தில் பிருத்விரா‌ஜ் ஜோடியாக பாவனா நடிக்கிறார். விரைவில் படம் பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்