இன்று முதல் படிக்காதவன் இசை

வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:48 IST)
பொங்கலுக்கு வில்லுவுக்கு போட்டியாக களம் இறங்குகிறது தனுஷின் படிக்காதவன். மணிசர்மாவின் படிக்காதவன் பாடல்கள் இன்று வெளியிடப்படுகிறது.

அரங்கம் பிடித்து நாலு பேரை அழைத்து நாற்பது பேருக்கு முன்னால் பாடல்களை வெளியிடும் கலாச்சாரத்துக்கு என்றேபேக்கப் செல்லிவிட்டது தமிழ் சினிமா.

ஏதாவது தொலைக்காட்சி சானலில் பாடல்களை வெளியிடுவதுதான் இப்போது பேஷன். அதிலும் படிக்காதவனை வெளியிடுவது சன் பிக்சர்ஸ். ஒன்றுக்கு பத்து சானல்களை கைவசம் வைத்திருப்பவர்கள்.

அரங்கத்தை தேடிப் போகாமல் சன் மியூசிக் சானலில் இன்றிரவு படிக்காதவன் படத்தின் பாடல்களை வெளியிடுகிறார்கள். மணிசர்மா இசையில் பா. விஜய், சினேகன், தபு சங்கர் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பொங்கலுக்கு படம் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்