அவ்வப்போது எம்.ஜி.ஆர். படங்கள் புதுப்படங்களுக்குரிய ஆர்ப்பாட்டத்துடன் ரிலீஸாகி வசூலை அள்ளும். விரைவில் டிடிஎஸ், சினிமாஸ்கோப் போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கிறது, எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்த அடிமைப்பெண் திரைப்படம்.
அடிமைப்பெண்ணில் எம்.ஜி.ஆர். மட்டுமின்றி ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். 1969 மே மாதம் வெளியான இப்படத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இம்மாதம் வெளியிடுகிறது, பாலாஜியின் டைமண்ட் பிக்சர்ஸ்.
இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தையும் டிடிஎஸ்-ல் வெளியிட திட்டமிட்டுள்ளது, டைமண்ட் பிக்சர்ஸ்.