அலிபாபா படத்தில் அறிமுகமான கிருஷ்ணாவின் புதிய படம், தொட்டுப்பார். பெயரிலிருந்தே இதுவொரு ஆக்ஷன் படம் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.
அலிபாபாவை தயாரித்த டாக்கி டைம்ஸ் தொட்டுப்பார் படத்தையும் தயாரிக்கிறது. டாக்கி டைம்ஸ் பட்டியல் சேகர், கிருஷ்ணாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்த நந்து தொட்டுப்பார் படத்தை இயக்குகிறார். வருகிற 20ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. திண்டுக்கல்லில் முதல் ஷெட்யூலை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கிருஷ்ணா ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.