விஜய்யின் வில்லு படத்தின் இசை வரும் பதினைந்தாம் தேதி வெளியிடப்படுகிறது.
போக்கிhp படத்துக்கு பின் வெளியான அழகிய தமிழ் மகன், குருவி இரண்டும் சாpயாக போகாத நிலையில் வெளிவருகிறது, வில்லு. போக்கிரியை இயக்கிய பிரபுதேவா, இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் என வில்லு வில் தில்லான காம்பினேஷன்.
பொங்கலுக்கு படம் ரிலீஸ். வரும் பதினைந்தாம் தேதி இசை வெளியீடு. பிரபுதேவாவின் மகன் இறந்த துக்கம் அனைவரிடமும் நிழலாடுவதால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆடியோவை வெளியிடுகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் போக்கிரி பாடல்கள் ஹிட்டானதுபோல் வில்லு பாடல்களும் மனதை அள்ளும் என்கிறது யூனிட்.