உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவு சினிமாத் துறையிலும் பிரதிபலிக்கிறது. கமலின் மர்மயோகியை தொடர்ந்து வேறு சில படங்களும் சிக்கலை சந்தித்துள்ளன.
ரஜினியின் எந்திரன் படத்தின் பட்ஜெட்டில் கணிசமான அளவு குறைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் திட்டமிட்டிருந்த பல காட்சிகள் சென்னையில் படமாக்கப்படுகின்றன. செலவு குறைப்பின் ஒரு பகுதி இந்த மாற்றம்.
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் உரிமையை வாங்குவதாக இருந்த ரிலையன்ஸ் தனது முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளது. இதேபோல் சௌந்தர்யா ரஜினியின் சுல்தான் தி வாரியர் படத்தின் உரிமையையும் இந்த நிறுவனம் வாங்குவது சந்தேகம் என்கின்றன செய்திகள். இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளது
அறுபது கோடி ருபாயில் தயாராகியுள்ள இப்படம், அதனை வசூலிக்குமா என்ற சந்தேகமே இந்த திடீர் பிரச்சனைக்கு காரணம். ரஜினி படத்துக்கே நிலைமை சரியில்லை என்பதால் பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிப்பவர்கள் தங்களது முடிவை பரிசீலனை செய்து வருகின்றனர்.