இந்தியில் எல்லாம் அவன் செயல் படத்தை ரீ-மேக் செய்கிறார், கே.எஸ். அதியமான்.
தூண்டில் படம் முடியும் முன்பே அடுத்து மலையாளத்தில் வெளியான சிந்தாமணி கொல கேஸ் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்வதென தீர்மானித்திருந்தார் அதியமான். படத்துக்கு ஜட்ஜ்மெண்ட் என்ற பெயரை தேர்வு செய்து, சன்னிதியோலிடம் கதையும் சொல்லியிருந்தார்.
படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்பது அதியமானின் எண்ணம். ஆனால், இசைப்புயலின் பிஸி ஷெட்யூல்டில் அதியமான் படத்துக்கு இடமில்லாமல் போனது. இந்த இடைவெளியில், சிந்தாமணி கொல கேஸை தமிழில் எல்லாம் அவன் செயலாக எடுத்து ரிலீஸும் செய்துவிட்டார், ஷாஜி கைலாஸ்.
சன்னிதியோல், நிகஷா பட்டேல் நடிப்பில் விரைவில் இந்தி பேசப் போகிறது சிந்தாமணி கொல கேஸ். ஜட்ஜ்மெண்ட் என்ற பெயரை சுருக்கி ஜஸ்டிஸ் என வைத்துள்ளார், அதியமான்.
தாமதமாக கிடைக்கும் நீதியும் அநீதிதான். தெரியுமா அதியமானுக்கு?