ஆக்சன், கட் சொன்னவர்கள் எல்லாம் எங்கே? கோடம்பாக்கத்தை மையமாக வைத்து ஒரு காம்பஸ் வட்டமடித்தால், அனைவரையும் அள்ளிவிடலாம். ஏல்லோரும் ஜிம்மில் தண்டால் எடுத்துக் கொண்டிருப்பார்கள். நடிகராவதற்கான முன்னோட்டம்தான் இந்த பாடி மெயின்டெயின்.
நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த இயக்குனர் கரு. பழனியப்பனும் விரைவில் அரிதாரம் பூசுகிறார். யார் இயக்கம், யார் தயாரிப்பு என்பதெல்லாம் முடிவாகவில்லை. முதல் கட்டமாக ஜிம்முக்கு சென்று பாடியை மெயின்டெயின் செய்வதில் தீவிரமாக உள்ளார்.
யார் இயக்கினாலும், யார் தயாரித்தாலும் டூயட் பாடவும், வில்லனை உதைக்கவும் உடம்பு முக்கியமில்லையா? அதுதான் இந்த முன்தயாரிப்பு.