ரஜினி படங்களில் கதைக்கு இருக்கும் முக்கியத்துவம் காமெடிக்கும் இருக்கும். ரஜினியின் காமெடியை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. சந்திரமுகியின் வெற்றியில் வடிவேலு, ரஜினி காமெடிக்கு முக்கிய பங்கு உண்டு.
இந்த ரகசியத்தை சரியாக புரிந்தவர், இயக்குனர் ஷங்கர். கள்ள நோட்டு விவகாரத்தை பேசும் சிவாஜியில் தாராளமாக காமெடியை புகுத்தியவர் இவர். படத்தின் அங்கவை, சங்கவை காமெடி எவ்வளவு தூரம் பேசப்பட்டது என்பது உலகறிந்த விஷயம்.
எந்திரன் படத்தில் காமெடி ஏரியாவை கலக்க இருப்பது கருணாசும், சந்தானமும். பாபாவில் நடித்த கருணாஸ் அதன் பிறகு எந்திரனில்தான் ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
சந்தானத்தின் கதை வேறு. குசேலனைத் தொடர்ந்து எந்திரனிலும் ரஜினியுடன் நடிக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.