பைனான்ஸா‌ல் பாடுபடும் படங்கள்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:49 IST)
ஒரு படத்தை எடுத்துவிட்டாலும் அதை தியேட்டர்களில் வெளியிடுவதற்கான ப்ரிண்ட் மற்றும் விளம்பர செலவுகளுக்கு பணம் இல்லாமல் பல படங்கள் இன்று தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒன்று பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம். முப்பத்தைந்து ஆண்டு காலம் சினிமாவில் இருந்தும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லையே என்ற வேதனையில் இருக்கிறார்.

இப்படி பல படத்தயாரிப்பாளர்கள் தவித்துக்கொண்டு இருக்கின்றனர். திருடா திருடி, மன்மதன் போன்ற படங்களைத் தயாரித்த கிருஷ்ணகாந்த் தான் தயாரித்த சொல்லி அடிப்பேன் படத்தை இன்னும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

அதேபோல் அண்ணாமலை கிரியேஷன்ஸ் தயாரித்த 'வெடிகுண்டு முருகேசன்' படம் ரெடியாகியும் வெளியிட காலதாமதமாகிறது. அதேபோல்... பாக்ராஜின் மகள் சரண்யா நடித்த 'திக்... திக், ராசி. அழகப்பன் இயக்கிய 'வண்ணத்துப் பூச்சி' இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

வந்தும் பிரயோஜனமில்லை என்றால் பரவாயில்லை. இந்த பைனான்ஸ் பிரச்சனையில் சில நல்ல படங்களும் முடங்கிப் கிடப்பதுதான் வேதனையான விஷயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்