இயக்குனர் பாபு கே. விஸ்வநாத் தஞ்சாவூர்காரர். தஞ்சை பின்னணியில் எந்தப் படமும் இதுவரை வந்ததில்லை என்று இவருக்கு ஆதங்கம். தனது முதல் படத்திலேயே அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் பாபு.
இவர் இயக்கும் கந்தாவில் தஞ்சாவூர் பின்னணியில் அதிக காட்சிகள் இடம்பெறுகிறது. முக்கியமாக ஒரு பாடல். மலேசியாவில் வேலை பார்க்கும் கரண் தனது ஆசிரியரைப் பார்க்க தஞ்சைக்கு வருகிறார். பிறந்த மண்ணில் காலடி பட்டதும் தொடங்குகிறது பாடல்.
தலையாட்டிப் பொம்மைக்கு தஞ்சாவூரு.. இது, வீராதி வீரருங்களோட அஞ்சாவூரு..
என்ற அந்தப் பாடலை தஞ்சாவூர்காரரான யுகபாரதி எழுதியுள்ளார். கரண், சத்யன் மற்றும் இரண்டு புதுமுகங்கள் இந்தப் பாடலுக்கு ஆடியுள்ளனர்.
கந்தாவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது.