அஞ்சாதேயில் அறிமுகமான அஜ்மல் பசுபதியுடன் இந்தி ரீ-மேக்கான தநா 47 அல 4777 படத்தில் நடித்து வருகிறார். சத்யம் சினிமாஸ் தயாரிப்பில் மணிரத்னத்தின் அசிஸ்டெண்ட் நந்தினி இயக்கும் படத்திலும் இவர்தான் ஹீரோ. இதுவொரு ரொமாண்டிக் காமெடி படம்.
சரணிடம் பல படங்களுக்கு அசோஸியேட்டாக பணிபுரிந்த வெங்கட் இயக்கும் ஆக்சன் படத்திலும் நடிக்கிறார், அஜ்மல். இந்தப் படத்துக்கு தேசிங்குராஜா என்ற பெயரை தேர்வு செய்திருந்தனர். பிறகு இயக்குனர் பூபதிபாண்டியன் விக்ரமை வைத்து இயக்குவதாக இருந்த ராஜா வேஷம் தலைப்பை தேர்வு செய்தனர்.
இப்போது படத்தின் பெயர் மீண்டும் மாறியிருக்கிறது. புதிய பெயர் கதிர்வேல் அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது.