ஜப்பானின் தேசிய மிருகமாகிவட்டதா காடஸில்லா? ஜப்பானில் இயங்கிவரும் டோக்கோ நிறுவனம் இதுவரை 18 காட்ஸில்லா திரைப்படங்களை தயாரித்திருக்கிறது.
ஹாலிவுட்டின் டைனசர்களையும், கிங்காங்கையும் சவாலுக்கு இழுப்பதுபோல் பிரமாண்டமாக காட்ஸில்லாவை உருவாக்க வேண்டும் என்பதே டோக்கோவின் குறிக்கோள். அதற்காக 19வது காட்ஸில்லா படமாக, காட்ஸில்லா பைனல் வார் திரைப்படத்தை தயாரித்துள்ளது. படத்தின் பட்ஜெட், 500 கோடி.
கிறிஸ்துமஸ் தினத்தில் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடுகிறது, வி.ஜி. மாரியப்பனின் விநாயகா கம்யூனிக்கேஷன்.
காட்ஸில்லாவை பாதி மிருகமாகவும், பாதி எந்திரமாகவும் இந்தப் படத்தில் சித்தரித்துள்ளனர்.