அதிர்ஷ்ட தேவதை ஸ்ரேயாவை ஆரத் தழுவியிருக்கும் நேரம் இது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என நாலா திசைகளிலும் பறந்து கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. நடுவில் ஆர்ட் பிலிமின் அழைப்பு வேறு.
தீபா மேத்தாவின் வாட்ஸ் குக்கிங் படத்தில் நடித்தவர் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார். kamagata maru என்ற அந்தப் படத்தை கனடா அரசு தயாரிக்கிறது. தீபா மேத்தா இந்தியர் என்றாலும் அவர் வசிப்பது கனடா என்பது குறிப்பிடத்தக்கது.
பிழைப்புக்காக கப்பலில் கனடா செல்லும் இந்தியர் அங்கு நுழையவிடாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்தியா திரும்பும் அவர்களை பிரிட்டீஷ் அரசு சுட்டுக் கொல்கிறது. இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார் தீபா மேத்தா. இதில் ஸ்ரேயாவுடன் நடிக்கயிருப்பது, கான்களையும், கபூர்களையும் பின்னுக்கு தள்ளிய அக்சய் குமார்.
தீபா மேத்தாவின் அடுத்தடுத்த படங்களில் ஸ்ரேயா நாயகி. அதுவும் அக்சய் ஜோடியாக. அதிர்ஷ்ட தேவதை தழுவவில்லை... தாண்டவமே ஆடியிருக்கிறார்.