சனா கான் கேட்கும் 15 லட்சம்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:36 IST)
முதல் படம் திரைக்கு வரும்முன் கரன்சி கட்டுடன் தயா‌ரிப்பாளர்கள் காத்திருக்கும் பட்டியலில் இல்லை சனா கான். சிம்புவுடன் சிலம்பாட்டத்தில் நடிக்கும் இவருக்கு அடுத்தப் படம் இன்னும் தகையவில்லை என்பது ஆச்ச‌ரியம்..

ஆள் அழகாக இருந்தால் அமுக்கிப் போட பரபரக்கும் சினிமாவில் சனா கானுக்கு ஏன் புறமுதுகு காட்டுகிறது திரையுலகம்?

நெருங்கி விசா‌ரித்ததில் சில நெருடலான விஷயங்கள். முதல் படம் காயா, பழமா என்பது தெ‌ரியும் முன்பே சம்பளமாக 15 லட்சம் கேட்டு பயமுறுத்துகிறாராம், சனா.

சிலம்பாட்டம் முடிந்த பிறகே அடுத்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கிசுகிசு உலவுகிறது. நயன்தாரா நடிகையே இல்லை என்ற இவரது ஸ்டேட்மெண்ட் ஏற்படுத்திய கிறுகிறுப்பு வேறு தயா‌ரிப்பாளர்களை தள்ளியே வைத்துள்ளது.

காரணம் ஆயிரம் இருந்தாலும் பதினைந்து கொடுத்தால் மட்டுமே படத்தில் நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறாராம், சனா கான்.

வெப்துனியாவைப் படிக்கவும்