தொடர் மழையால் படங்களின் வசூல் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாளில் ஏறக்குறைய 80 லட்சங்கள் (சென்னையில் மட்டும்) வசூலித்த வாரணம் ஆயிரம் கடந்த வாரத்தில் 56 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.
இதேபோல் தெனாவட்டு, சேவல் படங்களின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. சேவலின் சென்றவார சென்னை வசூல் வெறும் இரண்டரை லட்சம் மட்டுமே. வார இறுதி வசூலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஏகன் 6.3 லட்சங்கள் வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் மூன்று கோடி.
தெனாவட்டு முதல் மூன்று நாளில் 17 லட்சம் வசூலித்துள்ளது. இதன் வசூலும் மழை காரணமாக கணிசமான அளவு குறைந்துள்ளது. மொத்த வசூலில் வாரணம் ஆயிரத்துக்கு இரண்டாவது இடம். இதுவரை 2.10 கோடிகள் வசூலித்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க மழை காரணமாக படங்களின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.